அரபி மொழி கையெழுத்து பயிற்சிப் பதிவேடு | Arabi Mozhi Kaiyezhuthu Payirchi Padhivedu
₹40.00
Out of stock
Email when stock available
Description
<p style=”text-align: justify;”>அரபி மொழி வலது புறத்திலிருந்து இடது புறமாக எழுதப்படுகிறது இது திருக்ஃகுர்ஆனின் மொழியாகும் சிறப்பினைப் பெற்றிருப்பதுடன் ஒரு அந்நிய மொழியாக உயர்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படுகிறது இப்பயிற்சிப் பதிவேடு கீழ்நிலை வகுப்புகளில் பயிலும் சிறுவர் சிறுமியர்களின் அரபி எழுத்துப்பயிற்சிக்காக விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் அமைந்திருப்பதோடு அரபி மொழியினுடைய எழுதுத்துமுறையின் அடிப்படை அம்சங்களைப் படிப்படியாக அறிமுகப்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது எழுத்துகளின் வடிவங்கள் எழுத்துப்பயிற்சி ஒலிக்குறிகளின் அமைப்பு மற்றும் பயன்பாடு சிறுவர்களிடையே ஃகுர்ஆன் வசனங்களையும் அரபி வாசகங்களையும் படிக்கும் திறனையும் அரபி மொழியினை எழுதும் பழக்கத்தையும் அளிப்பதுடன் திருமறை ஒதும் வாய்ப்பினையும் அளிக்கப் பயனுள்ளதாக அமையும் துவக்க நிலைப் பள்ளிக் கூடங்கள் மற்றும் பள்ளிவாசல்களோடு இணைந்து செயல்படும் மக்தபுகளிலும் இப்பயிற்சிப் பதிவேடு அரபி மொழி இளைய சமுதாயத்தினரிடையே பரப்பும் பணியினை மேற்கொள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் திருக்ஃகுர்ஆன் ஓதுவதற்காக அரபி அகர வரிசை எழுத்துகள் ஒரு சொல்லில் பிணைக்கப்படும்போது அவை பெறும் கருங்கிய வடிவங்களை அடையாளம் காணுதல் அவற்றுடன் குறிக்கப்பட்டிருக்கும் ஒலிக்குறிகள் மற்றும் ஒவ்வொரு எழுத்தின் சரியான உச்சரிக்கும் முறை ஆகியவை தெரிந்திருப்பது போதுமானது. இவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்காக சில நிாட்களே போதுமானவை. இவை சிறுவர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் பயிற்சிகளுடன் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன இப்பயிற்சிப் பதிவேடு அரபி மொழி வாசகங்கள் திருக்ஃகுர்ஆன் திலாவத்து ஓதுதல் செய்யப் பழகிக் கொள்ளாத முதியோர்களுக்கும் மிக்க பயனுள்ள வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது இவ்வகையில் இந்நூல் முதியோர் அரபிப் பயிற்சிக்கு உகந்ததாகவும உள்ளது என்றால் அது மிகையாகாது இப்பயிற்சிக்குப் பின் திருக்ஃகுர்ஆன் ஓதும் கலை தஜ்வீத் பற்றிய விதிமுறைகள் முறையாக இக்கலையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நூல்களின் வாயிலாகக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது என்பதை அறியவும்
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | அலிஃப் புக்ஸ் அண்ட் பிரிண்ட்ஸ் |
Author Name | மற்றவை |