அன்பு நபியின் அமுத வாக்குகள் | Anbu Nabiyil Amudha Vaakkugal
₹240.00
1 in stock
Description
அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்: அண்ணல் நபிகளாரின் அமுத வாக்குகளில் பளிச்சென மின்னுகின்ற ஒழுக்கவியல் போதனைகள் மட்டும் தனியாகத் தொகுத்து தரப்பட்டிருப்பதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு இதயத்தை இலக்காக்கி, இதயம் சீர் பெறும் போது எல்லாமே சீர்பெறும் என்கிற உண்மையின் அடிப்படையில் ஒழுக்கவியலை விவரித்துள்ளார் நூலாசிரியர். மனித வாழ்வைப் பற்றிய பார்வை சரியாக இருந்தால் நாட்டம் சரியாக அமையும்; நாட்டம் சரியாக அமைந்தால் நடத்தையில் மாண்பும் மகத்துவமும் மலரும் என்பதுதான் இந்த நூல் தருகின்ற ஒரு வரிச் செய்தி. அண்ணல் நபிகளாரின் அமுத வாக்குகளுக்கு இதயத்தைத் தொடுகின்ற வகையில் குர்ஆன் வசனங்களைக் கொண்டும் நபி மொழிகளைக் கொண்டும் அழகான, அறிவார்ந்த, கருத்தாழம் மிக்க விளக்கங்களையும் கொடுத்துக் கண்களைக் குளிர வை திருக்கின்றார், நூலாசிரியர். இந்த விளக்கங்களும் குறிப்புகளும் வாசிப்பவரின் மனத்தில் மாறாத தாக்கத்தை ஏற்படுத்துகின்ற திறன் படைத்தவையாய், பார்வையைக் கூர்மைப்படுத்துபவை யாய், சிந்தையைத் தெளிவுபடுத்து பவையாய், மகத்துவமும் மாண்பும் மிக்க நடத்தையின் பக்கம் விரல் பிடித்து அழைத்துச் செல்பவையாய் இருப்பதை உணர முடியும். அவற்றைப் படிக்கப் படிக்க மனம் லேசாகும்; அகக் கண்கள் ஒளிரத் தொடங்கும் இறைப்பற்றிலும் இறைநேசத்திலும் இதயம் திளைக்கும்.
Additional information
Weight | 645 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் |