அன்னை கதீஜா | Annai Kathija
₹250.00
Out of stock
Email when stock available
Description
முஹம்மத் நபி ஸல் அவர்களின் அன்பு மனைவி ஒருநாள் நபிகளார் ஸல் அவர்கள் அன்னை கதீஜா அவர்களின் சிறப்பைப் பற்றி குறிப்பிடும்போது அவர் தம் விரலால் வானத்தையும் பூமியையும் சுட்டிக்காட்டி விட்டு கூறினார்கள் இறைத்தூதர் ஈஸா அவர்களின் தாய் மர்யம் வானங்களின் மிகச் சிறந்த பெண்மணி ஆவார் குவைலிதின் மகளார் கதீஜா பூமியில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் களில் மிகச் சிறந்த பெண்மணி ஆவார் கதீஜாவின் வாழ்க்கை இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் ஊற்றுக்கண் ஆகும் இஸ்லாத்தின் மேன்மைக்காக ஒருவரால் எப்படி நேரத்தை ஆற்றலை செல்வத்தை வாழ்வை அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு கதீஜா முன்மாதிரி எடுத்துக்காட்டு ஆவார் பொருள் செறிந்த கொள்கைக்காக வாழ ஆர்வம் கொண்டுள்ள இறைநம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் கதீஜாவின் வாழ்வு எப்போதும் ஒரு நினைவூட்டலாக இருந்து கொண்டே இருக்கும் நமது பிரார்த்தனைகளில் நாம் அன்னை கதீஜாவையும் நபிகளாரின் குடும்பத்தினரையும் நினைவுகூர வேண்டும் அவர் களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் எந்நாளும் மனதில் கொள்ள வேண்டும் அவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பு உணர்வும கடின உழைப்பும் விலைமதிக்க முடியாதவை இஸ்லாம் உலகின் அனைத்துப் பகுதிகளுக்குப் பரவவும் திருக் குர்ஆன் அதன் அசல் வடிவத்தில் இன்று வரை பாதுகாக்கப்படவும் அவை காரணமாக அமைந்துள்ளன அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் தனது பேரருளைப் பொழிவானாக
Additional information
Publisher | Goodword Tamil |
---|---|
Author Name | ஜொஹரா சுல்தான் |