அகத்தூய்மை | Agathooimai
₹140.00
Out of stock
Email when stock available
Description
பணபலம் ஆள்பலம் எதுவும் பலனளிக்காது அந்நாளில் சலனமற்ற அகத் தோடு இறைவனிடம் வருவானே அவன் ஒருவன்தான் வெற்றிவாகை சூடு வான்! (26:88 89) மிகவும் எளிதாக கருதுகிறோம் உள்ளம் என்பதை ஆனால் அதில்தான் எத்துனை எத்துனை ஆற்றல்களும் மறைதிறன்களும் பொதிந்துகிடக்கின்றன இறைநம்பிக்கை ஈமான் என்பதை சிந்தனையிலும் உள்ளத்திலும்தான் உறை கின்றது அது வேர்பிடித்தூன்றுவதும் உறுதியோடு நிலைகொள்வதும் உள் எத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள தவறுகிறோம் உலகின் நிம்மதியான வாழ்வும் மறுமையில் வெற்றியை ஈட்டியதற்குப் பிந் தைய கொண்டாட்டமான வாழ்வும் சலனமற்ற உள்ளத்தையே சார்ந்துள்ளது என்பதை முரசுகொட்டி அறிவிக்கின்றது வான்மறை உடலை இயக்கும் சுக்கான் உள்ளத்திடம்தான் உள்ளது பிரபஞ்சம் எங்கும் பரவியுள்ள அன்பும் பரிவும் இறைக்காதலும் உள்ளத்தில்தான் மையம் கொள் கின்ற இறைவனை உணர்ந்து தெளியும் உள்ளத்தில் இறைக்காதல் மிகைக் கின்றது இறைக்காதல் சிந்தனையில் உருவாகும் எண்ணங்களையும் மனதில் ஊறும் உணர்வுகளையும் இறைவன் திருமுன் முழுமனதோடு அர்ப்பணம் செய்ய ஆயத்தப்படுத்துகின்றது ஸிப்கத்துல்லாஹ் எனும் நிகரற்ற இறை வர்ணத்தில் கொஞ்சம் பெற்று நமக்கும் சொந்தமாக்குகின்றது ஸிப்கத்துல்லாஹ் மற்றும் ரிழாவின் மறுவுருவான சொர்க்கத்திற்கு உடை மையாளர்களாக நம்மை உருமாற்றும் அந்த கல்புன் ஸலீமை நோக்கி நகர்ந்து செல்வதற்கான ஒற்றையடிப் பாதையொன்றை மெதுமெதுவாக உருவாக்கித் தருகின்றது இந்நூல்
Additional information
Publisher | தாருல் ஈமான் பதிப்பகம் |
---|---|
Author Name | சையத்அப்துர்ரஹ்மான்உமரி |