ஃபிக்ஹுஸ் ஸுன்னா பாகம்-1 | Fiqh Us-sunnah – 1
₹140.00
6 in stock
Description
இஸ்லாமியச் சட்ட விளக்கங்கள் அவற்றின் ஆதாரங்களான அல்குர்ஆன், நபி வழி, சமூகத்தின் ஒருமித்த கருத்து ஆகியவற்றின் மூலம் விளக்கமாகக் கூறும் ஒரு நூலாகும் இது ஒரு முஸ்லிமுக்குத் தேவையான பல விஷயங்கள் மிக எளிதாகவும், புரிந்து கொள்ளும் வண்ணமும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. மிகவும் தேவையான இடங்களைத் தவிர கருத்து வேறுபாடுகள் இந்த நூலில் தவிர்க்கப்பட்டுள்ளன முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமியச் சட்டவிளக்கத்தின் உண்மை உருவம் இங்கே காட்சிப் படுத்தப்படுகிறது. அல்லாஹ், அவனது தூதர் (ஸல்) ஆகியோரின் சொற்களை மக்கள் புரிந்து கொள்வதற்கும், குர்ஆன், ஹதீஸ் வழியில் மக்களை ஒன்று திரட்டுவதற்குமான வாசல் இங்கே திறக்கப்படுகிறது கருத்துவேறுபாடுகள், ஒரே ஒரு மத்ஹப் என்ற பிடிவாதம் போன்றவற்றை இல்லாமல் ஆக்குவதற்கும், இஜ்திஹாதின் வாசல் அடைபட்டுவிட்டது என்ற மோசமான சிந்தனையைத் துடைத்து நீக்குவதற்கும் இந்நூல் வழிவகை செய்கிறது இந்த தீனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும், நமது சகோதரர்களுக்குப் பயன் தர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட நூலாகும் இது.
Additional information
Weight | 200 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் |