Showing the single result

Show sidebar
Close

ஷமாயில் திர்மிதீ

300.00
ஷமாயில் திர்மிதீ ‘ஷமாயில்' என்ற சொல்லுக்குத் தன்மைகள், பண்புகள், குணங்கள் என்பது பொருளாகும். மனித இயல்புகள், நற்குணங்கள் என்னும் பொருளில் இது கையாளப்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் அழகிய தோற்றம், உடல் அவயங்கள் அமைந்திருந்த விதம், உயரிய பண்புகள், நன்னடத்தைகள், நல்லொழுக்கங்கள், நடை, உடை, ஊண், உறக்கம், பேச்சு, சிரிப்பு, அழுகை, பணிவு உள்ளிட்டவற்றில் அழகிய நடைமுறைகள், வணக்க வழிபாடுகள், மக்களுடன் கலந்து பழகுதல் என தம் வாழ்நாளில் அப்பெருமகனார் கடைப்பிடித்த வாழ்வியல் அம்சங்கள் யாவும் இமாம் திர்மிதீ ( ரஹ் ) அவர்களின் "அஷ்ஷமாயிலுல் முஹம்மதிய்யாவில்” பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நபிகளாரின் சிறப்புப் பெயர்கள், வாழ்க்கை, வயது, அயராது உழைத்த உத்தமரின் மறுமைப் பயணம், அவர்களின் வாரிசு குறித்த விவரம், நபிகளாரைக் கனவில் காண்பது பற்றிய பல்வேறு தகவல்களை இமாம் திர்மித் அவர்கள் இந்நூலில் பதிவு செய்துள்ளார்கள். இமாம் திர்மிதீ ( ரஹ் ) அவர்கள் இந்த நூலைத் தொகுத்துள்ளார்கள் “ஷமாயில் திர்மிதீ” என்ற பெயரால் இந்த நூல் மக்களிடையே புகழ் பெற்று விளங்குகிறது. ஆழ்ந்த உணர்வுகளோடு இதனைப் படிக்கும் அன்பர்கள் நபிகளாரே நம் முன் இருப்பது போன்ற உணர்வைப் பெறுவது உறுதி.